தமிழக மீனவர்களின் விளக்கமறியல் காலம் நீடிப்பு

400 0

img_0004அத்துமீறி கடற்றொழில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் நான்கு பேரினது விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அவர்களை எதிர்வரும் 28ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்;துறை நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த நான்கு இந்திய மீனவர்களும் இந்த மாதம் முதலாம் திகதி கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.