மத்திய அரசின் அறிவிப்புக்கு, தடை விதிக்க முடியாது – உயர் நீதிமன்றம்

368 0

india-currency500 ரூபா மற்றும் 1000 ரூபா நாணய தாள்கள் தடை என்ற  இந்திய மத்திய அரசின் அறிவிப்புக்கு, தடை விதிக்க முடியாது என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் பயன்பாட்டில் இருந்த 500 மற்றும் 1000 ரூபா நாணய தாள்களை திருப்பி பெறுவதாக பிரதமர் மோடி கடந்த 8ஆம் திகதி அறிவித்தார்.

இதனையடுத்து பல்வேறு எதிர்ப்புக்கள் தெரிவிக்கப்பட்டன.

பிரதமர் மோடியின் அறிவிப்பால், ஏழைய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்து குறித்த அறிவிப்பிற்கு தடை விதிக்க வேண்டும் எனவும கோரி உயர் நீதிமன்றில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.

எவ்வாறாயினும் மோடியின் இந்த திட்டத்திற்கு பல அமைப்புக்கள் மற்றும் பிரதிநிதிகள் வரவேற்பு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.