கர்ப்பிணியான தனது மனைவியை தாக்கி கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட இராணுவத்தின் முன்னாள் விளையாட்டு ஆலோசகருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் மேல் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
2003ம் ஆண்டு மார்ச் மாதம் இவர் கர்ப்பிணியான தனது மனைவியை கொன்று புதைத்துள்ளார்.
இதனையடுத்து இவருக்கு எதிராக அனுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கில் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நிலையில் தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் மனைவியின் சடலத்தை மறைக்க முற்பட்டமைக்காக ஏழு வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

