இலங்கையின் கடல் பிரதேசத்தை பாதுகாப்பதற்காக ஜப்பான் நிதியுதவி

3480 20

japanese-grantஇலங்கையின் கடல் பிரதேசத்தை பாதுகாப்பதற்காக ஜப்பான் 1.83 மில்லியன் ஜப்பானிய யென்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
இலங்கையின் கடற்பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையிலேயே இந்த நிதியுதவி பயன்படுத்தப்படவுள்ளதாக குறப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பான உடன்படிக்கை நேற்று ஜப்பானிய தூதுவர் கேனிச்சி சுகான்மா மற்றும் இலங்கையின் திறைச்சேரி செயலாளர் எஸ் சமரதுங்க ஆகியோருக்கு இடையில் கைச்சாத்திடப்பட்டது.
குறித்த நிதியுதவியனது இலங்கை ரூபாவில் 2.4 பில்லியன் ரூபாவாகும்.
இதனைக்கொண்டு ஜப்பானின் இரண்டு ரோந்துக்கப்பல்களை கொள்வனவு செய்வது கடல்பாதுகாப்பு பிரிவினருக்கு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
இந்த இரண்டு கப்பல்களையும் ஜப்பானிய அரசாங்கமே வழங்குகின்றது.

Leave a comment