யாழ் மாநகர சபை ஊழியர்களின் முழு நிர்வாக பணிமுடக்கப் போராட்டம் நாளை காலை வரை ஒத்திவைப்பு-கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்கிறது(காணொளி)

325 0

sequence-01-still004யாழ் மாநகர சபையின் சுகாதாரத் தொழிலாளர்களால் இன்று காலை முன்னெடுக்கப்பட்ட முழு நிர்வாக பணிமுடக்கப் போராட்டம் நிபந்தனையுடன் நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பொலிஸாருக்கும் சுகாதார ஊழியர் தொழிற்சங்கத்;தினருக்கும் இடையில் ஏற்பட்ட சமரச முயற்சியின்; பலனாக நாளை காலை வரை முழு நிர்வாக பணிமுடக்கப் போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

யாழ் மாநகர சபையின் சுகாதாரத் தொழிலாளர்களால் இன்று காலை முழு நிர்வாக பணிமுடக்கப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

யாழ் மாநகர சபையின் சுகாதாரத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு, நல்லூர் பிரதேச சபை, கிளிநொச்சி, பிரதேச சபை, சாவகச்சேரி நகர சபை ஆகியவற்றில் கடமையாற்றும் தற்காலிக சுகாதாரத் தொழிலாளர்கள் ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இன்றையதினம் யாழ்ப்பாணம் மாநகர சபையின் சுகாதாரத் தொழிலாளர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் முழு நிர்வாகப் பணிமுடக்கப் போராட்டத்தின்போது, மாநகர சபையின் நுழைவாயிலை மறித்து சுகாதார தொழிலாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் காரணமாக மாநகரசபையில் கடமையாற்றும் அனைத்து உத்தியோகத்தர்களும் மாநகரசபை வளாகத்தினுள் நுழைய முடியாதவாறு வீதியில் நின்றனர்.

இதேவேளை, யாழ் மாநகர சபை சுகாதாரத் தொழிலாளர்களை சமரசம் செய்யும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் சுகாதாரத் தொழிலாளர்கள் தமக்கு நிரந்தர நியமனம் வழங்கக்கோரி கடந்த 9 நாட்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தமக்கு சரியான தீர்வு எதுவும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவித்து யாழ் மாநகர சபை சுகாதாரத் தொழிலாளர்கள் 9ஆவது நாளான இன்று முழு நிர்வாக பணிமுடக்கப் போராட்டத்தை மேற்கொண்டனர்.

இதன் காரணமாக மாநகரசபையில் கடமையாற்றும் அனைத்து உத்தியோகத்தர்களும் மாநகரசபை வளாகத்தினுள் நுழைய முடியாதவாறு வீதியில் நின்ற நிலையில், சுகாதாரத் தொழிலாளர்களால் இன்று காலை முன்னெடுக்கப்பட்ட முழு நிர்வாக பணிமுடக்கப் போராட்டம் நிபந்தனையுடன் நாளை காலை வரை ஒத்திவைக்கப்பட்டதையடுத்து காலை 10.30 மணியளவில் கடமைக்குத் திரும்பியுள்ளனர்.