இராணிவத்தை-பம்பரகலை தொழிற்சாலை வீதி புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்(காணொளி)

336 0

nuwaraeliyaநுவரெலியா இராணிவத்தை – பம்பரகலை தொழிற்சாலை வீதி புனரமைப்புப் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குன்றும் குழியுமாக காணப்பட்ட மக்கள் பாவனைக்குதவாத இராணிவத்தை – பம்பரகலை தொழிற்சாலை முன்னாலிருந்து குட்டிமலை தோட்ட வழியாக மிடில்வத்தை வரையிலான 2 கிலோ மீற்றர் வீதியை புனரமைக்க 1 கோடியே 20 இலட்சம் ரூபா செலவிற்கான முதல்கட்ட பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த வீதி, வீதி அபிவிருத்தி அதிகாரசபை புனரமைப்பு திட்டத்தின்கீழ் காபட் கொண்ட பாதையாக அமைப்படவிருக்கின்றது.

இந்நிகழ்வில் மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் மற்றும் மத்திய மாகாண சபை உறுப்பினர் சோ.ஸ்ரீதரன், அமைச்சின் இணைப்பு செயலாளர் ஜீ.நகுலேஸ்வரன் என பலரும் கலந்து கொண்டு பெயர் பலகையை திரை நீக்கம் செய்து வைத்ததோடு, பாதை புனரமைப்புக்கான பணிகளையும் ஆரம்பித்து வைத்தனர்.