வடக்கு மாகாணசபையின் எதிக்கட்சித் தலைவரை பதவி விலக்குமாறு டக்ளஸ் வடக்கு மாகாண சபைக்குக் கடிதம்(மேலதிக இணைப்பு)

287 0

douglas-devanandaவடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசாவை பதவி விலக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயக்கட்சியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா ஐக்கிய மக்கள் சுகந்திர கூட்டமைப்பின் செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசாவின் பதவியை நீக்கி விட்டு அதே கட்சியைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினரான வைத்திலிங்கம் தவநாதனுக்கு வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண சபையின் ஆரம்பத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கமலேந்திரன் கொலைக் குற்றச்சாட்டு சந்தேகத்தின் பேரில் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து எதிர்கட்சித் தலைவராக சின்னத்துரை தவராசா கட்சியால் நியமிக்கப்பட்டார்.

சின்னத்துரை தவராசா எதிர்கட்சித் தலைவராக நியமிக்கப்படும் போது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் பதவி வகித்த பின்னர் அப்பதவியை கிளிநொச்சி மாவட்டத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்ற எழுதாத ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்போது சின்னத்துரை தவராசா 2 வருடங்கள் எதிர்க்கட்சித் தலைவராக பதவி வகித்த நிலையில், வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் பதவி மாhகண சபை உறுப்பினர் தவநாதனுக்கு வழங்கப்படவிருப்பதாக அக்கட்சியின் வடமராட்சி அமைப்பாளர் ஐயாத்துரை இரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இருப்பினும் வடக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரை மாற்றுவது தொடர்பாக ஈழ மக்கள் ஐனநாயக்ககட்சியின் தலைமைப்பீடத்தினால் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்க முடியாது என்றும், எதிர்க்கட்சித் தலைவர் பதவி தொடர்பாக வடக்கு மாகாண சபை உறுப்பினர்களும், அவைத் தலைவரும் எடுக்க வேண்டிய முடிவு என்றும் சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.