மின்கட்டணத்தை அபராதம் இன்றி 14-ந்தேதி வரை செலுத்தலாம்- மின்சார வாரியம் தகவல்

312 0

ஊரடங்கு காரணமாக மின்கட்டணத்தை அபராதம் இன்றி 14-ந்தேதி வரை செலுத்தலாம் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (மின்சார வாரியம்) சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-கொரோனா வைரஸ் பரவுவதால் கடந்த 24-ந்தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தியதன் காரணமாக, தாழ்வு அழுத்த நுகர்வோர்களின் இடர்பாடுகள் கருத்தில் எடுத்து கொள்ளப்பட்டு இருக்கிறது.

அதன்படி, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தாழ்வழுத்த மின் பயனீட்டாளர்களின் மின் இணைப்புகளுக்கு, மின் கட்டணம் மற்றும் இதர நிலுவைத் தொகை செலுத்துவதற்கான கெடு நாள் கடந்த 25-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 14-ந்தேதி வரை இருந்தால், அதற்கான தாமத (அபராதம்) கட்டணம் மற்றும் மின் துண்டிப்பு, மறு இணைப்பு கட்டணம் இன்றி வருகிற 14-ந்தேதி வரை செலுத்தலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.