வெளியே சுற்றிய 4,100 பேர் மீது வழக்கு- கண்காணிக்க ஐபிஎஸ் குழு அமைப்பு

15 0

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றிய 4,100 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த புதன்கிழமை அன்று ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே வருபவர்களை பிடித்து போலீசார் அறிவுரை வழங்கி திருப்பி அனுப்பினர்.

இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றிய 4,100 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். குறிப்பாக சென்னையில் மட்டும் 189 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வீட்டிற்குள் இருக்காமல் அரசின் 144 தடை உத்தரவை மீறி வெளியே சுற்றியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும் தமிழகத்தில் வெளியே சுற்றுவோரை கண்காணிக்க 6 ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.  காவல்துறை பணிகளை ஒருங்கிணைக்கும் குழுவில் ஏடிஜிபி ஜெயந்தி முரளி, தாமரைக் கண்ணன், சேஷசாயி, சீமா அகர்வால் உள்ளிட்ட ஐபிஎஸ் அதிகாரிகளும் உள்ளனர்.