சென்னை மாநகராட்சியில் 24,000 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்- அமைச்சர் ஜெயக்குமார்

15 0

சென்னை மாநகராட்சியில் மட்டும் 24,000 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

பொதுமக்கள் சமூக விலகியிருத்தலை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். போலியோவை விரட்டியடித்த பெருமை இந்தியாவுக்கு உண்டு. கொரோனாவையும் விரட்டியடிக்க வழிகாட்டுதல்களை முறையாக பின்றபற்ற வேண்டும். கொரோனா தொடர்பான சந்தேகங்களுக்கு 044-25384520 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

சென்னை மாநகராட்சியில் மட்டும் 24,000 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.