ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த போது சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட 05 பேர் கைது

19 0

நாட்டில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தபட்டுள்ள வேளையில் பொகவந்தலாவ கெம்பியன் தோட்டப் பகுதியில் சட்டவிரோத மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்த 5 சந்தேகநபர்களை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொகவந்தலாவ பொலிஸாருக்கு நேற்று (25) மாலை கிடைக்கபெற்ற இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, சட்டவிரோத மாணிக்ககல் அகழ்விற்கு பயன்படுத்தபட்ட உபகரணங்களையும் பொலிஸார் மீட்டுள்ளதோடு 5 சந்தேக நபர்களையும் இன்றைய தினம் ஹட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலைபடுத்துவதற்கான நடவடிக்கையினை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, ஹட்டன் பொலிஸ் வலையத்திற்குட்பட்ட பொலிஸ் நிலையங்களுக்கு கீழ் உள்ள மக்களை ஊரடங்குசட்டம் அமுல்படுத்தபட்ட வேளையில் வீட்டைவிட்டு வெளியில் வர வேண்டாமெனவும் வீதிகளில் நடமாட வேண்டாமெனவும் ஹட்டன் நீதவானால் உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளமையும் குறிப்பிடதக்கது.