நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சிகிச்சையளிக்கும் இடமாக மாற்றம்!

290 0

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சிகிச்சையளிக்க கொழும்பில் உள்ள நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை பயன்படுத்தப்படவுள்ளது.

அந்தவகையில் நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலை மற்றும் பொரளை வைத்தியசாலை ஆகியவற்றை பயன்படுத்தப்பட உள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க மேற்கோளிட்டு அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த கர்ப்பிணித் தாய்மார்களுக்கான அனைத்து சிகிச்சையும் ஒரு சிறப்பு மருத்துவரின் மேற்பார்வையில் மேற்கொள்ளப்படும் என்றும் டொக்டர் ஜாசிங்க கூறியுள்ளார்.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களைப் பராமரிப்பதற்காக ஹோமாகம வைத்தியசாலையும் தயார் செய்யப்பட்டுள்ளதுடன்,வாய்ஸ் அப் அமெரிக்கா கட்டிட வளாகம் இலங்கை இராணுவத்தின் உதவியுடன் புதுப்பிக்கப்பட்டு நோயாளிகளைப் பராமரிக்க தயார் நிலையில் உள்ளது.

இதற்கிடையில், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக மருத்துவமனையின் 30 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு, முல்லேரியா வைத்தியசாலை ஆகிய இடங்கள் வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளைப் பராமரிப்பதற்கும் தயார் நிலையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.