யாழில் போதகருடன் பழகிய இருவருக்குக் காய்ச்சல்! வைத்தியசாலை பணிப்பாளரின் அவசர அறிவிப்பு!!

335 0

யாழ்.செம்மணி – இளையதம்பி வீதியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்தில் மதபோதனையில் கலந்து கொண்டவர்கள் முடிந்தளவு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுமாறும் கொரோனா தொற்று தொடா்பான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் தம்மை பரிசோதனைக்குட்படுத்துமாறும் கேட்கப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி மற்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் ஆகியோர் இந்த கோரிக்கையினை விடுத்திருக்கின்றனர்.