நாளை லாரிகள் ஓடாது என்று லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் ஓடும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகளும் நாளை ஓடாது என்பது உறுதியாகி உள்ளது.கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தமிழகத்தில் நாளை லாரிகள் ஓடாது என்று மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் குமாரசாமி, செயலாளர் வாங்கிலி ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
இதை ஏற்று தமிழகத்தில் நாளை ஒரு நாள் மட்டும் லாரிகள் இயக்கப்பட மாட்டாது. மாநிலம் முழுவதும் உள்ள 4 லட்சம் லாரிகளும் இயக்கப்படாமல் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்படும்.
கொரோனா வைரஸ் பாதிப்பால் பல்வேறு மாநிலங்களில் பெரிய தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் லாரி உரிமையாளர்களுக்கு லோடு கிடைக்கவில்லை. பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
இருப்பினும் பொதுமக்களின் நலன் கருதி, நாளை (22-ந் தேதி) முழுவதும் லாரிகள் இயங்காது. அனைத்து லாரி உரிமையாளர்களும் இந்த உத்தரவை பின்பற்றி தங்களது வாகனங்களை இயக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லாரிகள் ஓடாது என்று லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளதால் தமிழகத்தில் ஓடும் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகளும் நாளை ஓடாது என்பது உறுதியாகி உள்ளது.