அமெரிக்காவில் கொரோனா… இந்தியர்களை பாதுகாப்பாக இருக்கும்படி தூதரகம் அறிவுறுத்தல்

197 0

கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் அனைவரும் பத்திரமாக இருக்கும்படி இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த உலக நாடுகள் போராடி வருகின்றன. சீனா, இத்தாலி, தென்கொரியா, ஈரான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கொரோனாவால் அதிக உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த நாடுகளில் பல்வேறு சுகாதார நடவடிக்கைகள், சமூக தனிமைப்படுத்தல், பயணக் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில்18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 230க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். இதனால் அவசரகால மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் அனைவரும் பத்திரமாக இருக்கும்படி இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளது. கொரோனா அச்சுறுத்தல் அதிகம் இருப்பதால் இந்தியர்கள் தங்கள் வீடுகளிலேயே பாதுகாப்பாக இருக்க வேண்டும், சமூக தனிமைப்படுத்தல் விதிகளை பின்பற்ற வேண்டும் என கூறி உள்ளது.
மேலும் விசா நீட்டிப்பு தொடர்பாக, யு.எஸ்.சி.ஐ.எஸ் வலைத்தளத்தை பார்க்கும்படி தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.