ராஜபக்ஷர்கள் ரணிலை பாதுகாக்கின்றனர் – வசந்த சமரசிங்க!

220 0

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ராஜபக்ஷர்கள் பாதுக்கப்பதாக ஜே.வி.பி.யின் மத்திய குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

2016 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மத்திய வங்கி மோசடி தொடர்பாக ரவி கருணநாயக்க உட்பட 12 பேரைக் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. அந்த நேரத்தில், ரணில் விக்கிரமசிங்க மத்திய வங்கியின் பொறுப்பில் இருந்தார். அந்த பட்டியலில் அவரது பெயர் ஏன் சேர்க்கப்படவில்லை?

அவர் பதிலளிக்கையில் “தற்போது ரவி கருணாநாயக்க, அர்ஜுன் ஆலோசியஸ் போன்றவைகள் ராஜபக்ஷவின் மறைவில் இருக்கின்றனர். அத்தோடு ரணில் விக்ரமசிங்கவையும் ரவி கருணாநாயக்கவையும் ராஜபக்ஷர்களே பாதுகாக்கின்றனர்.

ரவி கருணாநாயக்க 470 வாகனங்களை கை டிராக்டர்களுக்கான அனுமதிப்பத்திரத்தில் இறக்குமதி செய்தார். நாங்கள் அந்த குற்றச்சாட்டுக்களை பதிவு செய்தோம். இறுதியாக, ஆர்.எம்.வி.யில் 500 குற்றச்சாட்டுக்கள் அடங்கிய ஆவணங்கள் காணாமல் போயின” என குறிப்பிட்டார்.

இதேவேளை ராஜபக்ஷ ஆட்சியின் போது, ஊழல் மற்றும் மோசடி தொடர்பான அதிக அளவிலான குற்றச்சாட்டுகளை சமர்ப்பித்தவர் நீங்கள்தான். அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, நீங்கள் அதிலிருந்து பிரிந்துவிட்டதாகத் தெரிகிறது? என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், “நாங்கள் ராஜபக்ஷர்களைபார்த்து பயந்திருந்தால், 2011 முதல் இப்போது வரை இந்த பணியை நாங்கள் ஆரம்பித்திருக்க மாட்டோம். ராஜபக்சர்கள் எங்களை மிரட்ட முடியாது. அதே சமயம், ராஜபக்ஷர்களா அல்லது விக்ரமசிங்கவா என்று எங்களுக்கு கவலை இல்லை. நாங்கள் இன்னும் அந்த தலையீடுகளில் ஈடுபட்டுள்ளோம்.

அந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான தகவல்களை இப்போது கூட நாங்கள் பெறுகிறோம். ஆனால் மிகவும் கடுமையான பிரச்சினை உள்ளது. மத்திய வங்கி திருடர்களைப் பிடிக்க வந்தவர்களும், எயார்பஸ் ஒப்பந்தத்தில் இருந்து பணம் பெற்றவர்களும், இப்போது ஒன்று கூடி, திருட்டை மறைக்க ஒரு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர். இந்நிலையில் ஒரு முடிவை எடுக்குமாறு நாங்கள் மக்களிடம் கேட்கிறோம்.

மேலும் நாடாளுமன்றில் இந்த மோசடி குறித்து பேசுவதற்கு எமக்கு குறைந்தபட்சம் எதிர்க்கட்சி என்ற பதவியாவது கிடைக்க வேண்டும். அவ்வாறு கிடைத்தால் அந்தப் பொறுப்பை நாங்கள் நாடாளுமன்றில் சரிவர செய்வோம்.” என கூறினார்.