பொலிஸ் ஊரடங்கு உத்தரவு தற்காலிகமாக நீக்கப்பட்டது

243 0

புத்தளம் பொலிஸ் பிரிவு, சிலாபம் பொலிஸ் பிரிவு, நீர்கொழும்பு பொலிஸ் பிரிவு, கொச்சிகட பொலிஸ் பிரிவு ஆகியவற்றில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

அதாவது புத்தளம், ஆணைமடு, கல்பிட்டிய, கருவலகஸ்வெவ, முன்தலம, நவகன்னெகம, பல்லம, வனாதமுல்லுவ, உடப்புவ, நுரைச்சோலை, சாலிய வெவ, சிலாபம், தங்கொட்டுவ, கொஸ்வத்த, மாதம்பே, வென்னப்புவ, ஆராச்சிகட்டுவத மற்றும் கொச்சிக்கட பொலிஸ் பிரிவுகளுக்கு தற்காலிகமாக ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பகுதிகளுக்கு மீண்டும் நண்பகல் 12 முதல் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கிடையில் இலங்கை முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் எதிர்வரும் திங்கட்கிழமை வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால்பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.