நாடாளுமன்ற தேர்தலினை ஒத்திவைக்கும் தீர்மானத்தினை வரவேற்றார் சஜித்!

191 0

நாடாளுமன்ற தேர்தலினை ஒத்திவைக்கும் தீர்மானத்தினை முன்னாள் எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வரவேற்றுள்ளார்.

கொழும்பில் நேற்று(வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “உலகளாவிய ரீதியில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாட்டு மக்கள் பெரிதும் அச்சத்தில் இருக்கின்றனர்.

பொதுத் தேர்தலை பிற்போடுவதற்கு தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்திருப்பதை வரவேற்பதுடன், நாட்டு மக்களின் நலன் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு கவனம் செலுத்தியதற்காக ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் ஆணைக்குழுவினருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்த தீர்மானம் முன்னரே எடுக்கப்பட்டிருந்க வேண்டும். இருந்தபோதிலும் தேர்தல் ஆணைக்குழு இந்த முடிவை எடுத்துள்ளது. மக்களுக்கான பலத்தைப் பெற்றுக் கொடுப்பது அரசாங்கத்தின் கடமையாகும்.

கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூட்டோ அந்நாட்டு மக்களுக்கு நெருக்கடி நிலைமையைக் கருத்தில் கொண்டு நிவாரணப் பொதியொன்றை பெற்றுக் கொடுத்துள்ளார். இதே போன்ற நிவாரணப் பொதிகள் எம் நாட்டு மக்களுக்கும் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.

தற்போது ரைவல் பரவல் காரணமாக தொற்று நீக்கம் மற்றும் ஆட்புலக்கங்களை குறைத்தல், ஊரடங்குச் சட்டம் என்பன அமுல்படுத்தப்பட்டு வருகின்றன.

இவ்வாறான நிலைமைகளில் , இந்த இடைப்பட்டக் காலத்திற்குள் மக்களுக்கான நிவாரணப் பொதிகள் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.

உலகச் சந்தையில் எரிபொருள் விலை பாரிய இளவில் குறைந்துள்ள போதிலும் அரசாங்கம் மேலும் ஒரு வருடத்திற்கு எரிபொரள் விலையை குறைக்கபோவதில்லை என்று அறிவித்திருக்கின்றது.

ஏன் இவ்வாறான அறிவிப்பை விடுத்துள்ளது என்பது தொடர்பில் எமக்கு ஒன்றும் புரியவில்லை. தேர்தல் ஆணைக்குழுவும் தேர்தலை பிற்போட்டுள்ள நிலையில் உடனே நாடாளுமன்றத்தை கூட்டி, நாட்டில் ஏபட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் கலந்துரையாடி மக்களுக்கான விசேட நிவாரணம் பொதியைப் பெற்றுக் கொடுப்பது தொடர்பில் தீர்மானம் எடுக்க வேண்டும். இதற்கான நாங்கள் எமது முழு ஒத்துழைப்பையும் பெற்றுக் கொடுக்க தயாராகவுள்ளோம்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.