வடக்கு மாகாண முன்னாள் போக்குவரத்து அமைச்சர் டெனிஸ்வரனை உள்ளடக்கிய சுயேட்சைக் குழு உட்பட 6 சுயேட்சைக் குழுக்களும் 2 அரசியல் கட்சிகளினதும் வேட்புமனு வன்னி தேர்தல் தொகுதியில் நிராகரிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (வியாழக்கிழமை) 12 மணியுடன் நிறைவடைந்த நிலையில் கட்சிப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன்போது, வன்னி தேர்தல் தொகுதியில் வேட்புமனுவைத் தாக்கல்செய்த 34 சுயேட்சைக் குழுக்களில் 6 சுயேட்சைக் குழுக்களின் வேட்புமனுவும் 2 சிங்களவர்களை உள்ளடக்கிய அரசியல் கட்சிகளின் வேட்புமனுவும் மனுவில் காணப்பட்ட பல்வேறு குறைபாடுகள் காரணமாக நிராகரிக்கப்பட்டுள்ளது.

