இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் ஜேர்மனியில் ஏற்பட்டுள்ள மிக மோசமான நெருக்கடி நிலை இதுவென அந்நாட்டின் சான்சலர் எஞ்சலா மர்கல் தெரிவித்துள்ளார்.
எனவே இதை தடுக்க உலக நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்படி வேண்டியது அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக ஜேர்மனியல் இதுவரையில் 28 பேர் உயிரிழந்துள்ளதோடு, 12,327 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கடந்த 24 மணி நேரத்தில் சீனாவில் எந்தவொரு நபரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி அடையாளம் காணப்படவில்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உலகலாவிய ரீதியில் இதுவரையில் இரண்டு இலட்சத்து 17 ஆயிரத்து 247 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 8 ஆயிரத்து 784 பேர் பலியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

