அரச மற்றும் தனியார்போக்குவரத்து பேருந்துகளில் கிருமித்தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அதற்கமைய திருகோணமலை மத்திய பேருந்து நிலையத்திலும் பேருந்துகளில் கிருமித்தொற்று நீக்கும் நடவடிக்கை இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னெடுக்கப்பட்டது.
பொலிஸ் மற்றும் கடற்படையினர் இணைந்து இந்த நடவடிக்கையை முன்னெடுத்தனர்.
போக்குவரத்து சேவைக்கு புறப்படும் பேருந்துகளிலும் சேவையினை முடித்துவிட்டு நிலையத்தில் தரித்து நிற்பதற்கு வரும் பேருந்துகளிலும் இதன்போது தொற்று நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

