யாழில் தும்புத் தொழிற்சாலையில் தீ விபத்து

356 0

யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் ஏ9 வீதிக்கருகாமையில் அமைந்துள்ள தும்புத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல இலட்சம் பெறுமதியான தென்னம் பொச்சுக்கள் தீக்கிரையாகியுள்ளன.

தும்புத் தொழிற்சாலைக்கு அருகாமையில் காணப்படும் காட்டிற்கு இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது காட்டிற்கு வைக்கப்பட்ட தீ பரவலானது தும்புத் தொழிற்சாலையின் வெளியில் அடுக்கப்பட்டுள்ள பொச்சுக்கள் மீது பரவியமையால் குறித்த சம்பவம் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த இராணுவத்தினர், தென்மராட்சி தீயணைப்பு படையினர்கள் மற்றும் ஊர்வாசிகள் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தனர்.

தீ விபத்து தொடர்பான மேலதிக விசாரனையை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.