சிரேஷ்ட ஊடகவியலாளர் சமன் வகாராச்சி கொழும்பில் இன்று(15) காலமானார். இலங்கை பத்திரிகையாளர் சங்க முக்கியஸ்தரான இவர், கடந்த நல்லாட்டசி அரசாங்கத்தின்போது லேக்ஹவுஸ் நிறுவன ஆசிரியர் பீட பணிப்பாளராக பணியாற்றிய இவர் சிலகாலம் அமெரிக்காவில் வாழ்ந்தது வந்தவராவார்.
ஊடகவியலாளர்களின் நலனில் அக்கறை கொண்ட கடந்த காலத்தில் அரசாங்கத்தினால் ஊடகவியலாளர்கள் தாக்கப்படும் போது குரல் கொடுத்தவர்களில் ஒருவராவார்.
அன்னாரது பூதவுடல் பொரளை ஜயரத்ன மலர்சாலையில் நாளை (16) மற்றும் நாளை மறுதினம் (17)ஆகிய நாட்களில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
பின்னர், புதன்கிழமை (18) அன்னாரது சொந்த ஊரான கேகாலையில் இறுதி கிரியை நடைபெறும் என குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

