மியான்மரில் அவதூறு வழக்கில் பத்திரிகை தலைமை நிர்வாகி, ஆசிரியர் கைது

313 0

201611112047370437_myanmar-detains-two-newspaper-officials-in-defamation-case_secvpfமியான்மரில் அவதூறாக பேஸ்புக் இணைய தளத்தில் செய்தி பதிவு செய்ததாக பத்திரிகை நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லெவன் மீடியா குரூப் மியான்மரில் பத்திரிகை நடத்தி வருகிறது. இதன் தலைமை நிர்வாகியாக தான் ஹட் ஆங் இருந்து வருகிறார். தலைமை ஆசிரியராக வெய் பியோ இருந்து வருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த பத்திரிகையில் ஒரு செய்தி பிரசுரமானது. இந்த செய்தி அந்த பத்திரிகையின் பேஸ்புக் பக்கத்தில் போஸ்ட் செய்யப்பட்டது. அந்த செய்தியில் முன்னாள் அரசியல் கைதியும், ஆங் சான் சூகியின் ஜனநாயக தேசிய லீக் கட்சியின் முக்கிய தலைவருமான பியோ மின் தெய்ன் ஊழல் செய்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் அந்த பத்திரிகை ஆசிரியர் மற்றும் நிர்வாக இயக்குனர் மீது அவதுறு பியோ மின் தெய்ன் வழக்கு தொடர்ந்தார். இதனடிப்படையில் அவர்கள் இருவருக்கும் போலீசார் சார்பில் சம்மன் அனுப்பப்பட்டது. சம்மன் அனுப்பப்பட்டதைத் தொடர்ந்து இருவரும் இன்று சரணடைந்தனர். அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இரண்டு வாரங்கள் சிறைக்காவலில் இருப்பார்கள் எனக் கூறப்படுகிறது.

அவர்கள் இருவர் மீதும் சர்ச்சைக்குரிய தொலைத்தொடர்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சட்டமானது மிரட்டல், கடத்தல், தொந்தரவு, அவதூறு, முறைகேடான செல்வாக்கு போன்றவற்றை ஊடகம் பயன்படுத்துவதை தடை செய்கிறது.