கிளிநொச்சியில் வெடிப்பு சம்பவம் : சந்தேகத்தில் இளைஞர் கைது!

328 0

கிளிநொச்சி, முரசு மோட்டை கோரக்கன் கட்டு குடியிருப்பு பகுதியில் வீடொன்றில் நேற்றிரவு (14-03-2020) இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தையடுத்து குறித்த வீட்டில் தங்கியிருந்த இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்

கிளிநொச்சி முகமாலைப்பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில்  ஈடுப்பட்டு வருகின்ற நபர் ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வெடிப்பு சம்பவம்  இடம்பெற்றதையடுத்து அவ்விடத்திற்கு விரைந்த இராணுவத்தினர் குறித்த வீட்டை சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். இதன்போது ஒரு தொகை வெடி பொருட்களுடன் குறித்த நபரை கைதுசெய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ; இராணுவத்தினர், கிளிநொச்சி பொலிஸாரிடம் ஒப்படைத்ததையடுத்து மேலதிக விசாரனைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.