உலக சந்தையில் ஏற்பட்டுள்ள மசகு எண்ணை மீதான விலைக் குறைப்பை நாட்டு மக்களுக்கு பெற்றுக்கொடுப்பது தொடர்பான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
பருப்பு மற்றும் மின்சார கட்டணத்தை குறைத்து அதனூடாக எரிப்பொருள் விலையை குறைப்பதன் நன்மையை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக அரசாங்கத்தின் உயர் மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதிய கொரோனா வைரஸ் பரவலால் உலக சந்தையில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 67 அமெரிக்க டொலர்களாக காணப்பட்ட ஒரு பீப்பாய் மசகு எண்ணையின் விலை இன்றைய நிலையில் 34 அமெரிக்க டொலர்களால் குறைவடைந்துள்ளது.
அதற்கமைய கடந்த இரண்டரை மாதங்களுக்குள் உலக சந்தையில் மசகு எண்ணையின் விலை சடுதியாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
இவ்வாறு எரிபொருட்களின் விலை குறைவடைந்துள்ளதன் நன்மைகளை நாட்டு மக்களுக்கு பெற்றுக்கொடுப்பது தொடர்பான வேலைத்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது செயலாளர் பி.பீ.ஜயசுந்தரவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், பருப்பு மற்றும் மின் கட்டணத்தை குறைத்து அதனூடாக எரிப்பொருள் விலையை குறைப்பதன் நன்மையை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பது தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதன்படி, எரிபொருள் விலை குறைப்பு குறித்த சரியான கணக்கீட்டின் ஊடாக எதிர்காலத்தில் பருப்பு மற்றும் மின் கட்டணங்களின் விலை திருத்தப்படும் என அரசாங்கத்தின் உயர் மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கருத்து தெரிவித்த அமைச்சர் பந்துல குணவர்தன எதிர்வரும் புதன்கிழமை சில பொருட்கள் மீது விலைக்குறைப்பு மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

