பொதுத் தேர்தலில் சஜித் பிரேமதாசவை பிரதமராக்கி பாராளுமன்ற அதிகாரத்தை கைப்பற்றுவது மலையக மக்களின் எதிர்பார்ப்பு என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் தெரிவித்துள்ளார்.
பதுளை வேவஸ்ஸ தோட்ட மேற்பிரிவில் இன்று (13) மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்களின் நம்பிக்கைக்கு முற்றிலும் விரோதமான செயற்பட்டவர் எனவும் கூறினார்.
அந்த ஜனநாயக விரோத செயற்பாட்டால் சுமார் மூன்று மாதங்கள் மக்கள் பணிகளில் பாரிய தொய்வு ஏற்பட்டதாக கூறிய அவர் அதன் பின்னர் கடந்த ஜனாதிபதி தேர்தலில் அடைந்த தோல்வியின் மூலம் பாரிய பின்னடைவை சந்தித்தாகவும் குறிப்பிட்டார்.
ஆனால் எதிர்வரும் பொதுத் தேர்தலில் சஜித் பிரேமதாசவை பிரதமராக்கி பாராளுமன்ற அதிகாரத்தை கைப்பற்றுவது உறுதி எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
அவ்வாறான ஒரு அரசாங்கத்தை ஏற்படுத்துவதில் மலையக மக்கள் மிக தெளிவாக இருப்பதாகவும் முன்னாள் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் மேலும் தெரிவித்துள்ளார்.

