ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பேர்

296 0
நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ள இரண்டாவது கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவரின் குடும்ப உறுப்பினர்கள் வைத்திய பரிசோதனைக்காக ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதற்கமைய கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவரின் எட்டு குடும்ப அங்கத்தர்கள் வரையில் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பில் வசிக்கும் குறித்த நபர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் தொடர்ந்தும் ஐ.டீ.எச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த பின்புலத்திலேயே குறித்த நபரின் குடும்ப உறுப்பினர்கள் வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோய் ஆய்வு பிரிவின் பிரதம தொற்று நோய் ஆய்வு பிரிவு வைத்தியர் சுதத் சமரவீர அததெரணவிற்கு தெரிவித்தார்.