பிரதமரின் ஆலோசனையின் பேரில், தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் கீழ் உள்ள அனைத்து திரைப்பட அரங்குகளிலும் மறு அறிவித்தல் வரை திரைப்படங்கள் திரையிடலை நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக கலாச்சார விவகார அமைச்சகத்தால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

