மிச்சேல் ஒபாமா ஜனாதிபதியாக வேண்டும்: அமெரிக்க மக்கள் வேண்டுகோள்!

267 0

michalவரும் 2020 ஆம் ஆண்டில் மிச்செல் ஒபாமா கட்டாயமாக அமெரிக்காவின் ஜனாதிபதியாக வேண்டும் என்று அமெரிக்க மக்கள் சமூகவலைத்தளங்களில் கருத்துக்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். இவர் வரும் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி அமெரிக்காவின் ஜனாதிபதியாக பொறுப்பு ஏற்க உள்ளார்.

இதற்கு அமெரிக்க மக்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அது குறித்து பல்வேறு கருத்துக்களையும் மக்கள் சமூகவலைத்தளங்களில் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சமூகவலைத்தளமான பேஸ்புக் மற்றும் டுவிட்டரில் வரும் 2020 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தற்போதைய ஜனாதிபதியின் பராக் ஒபாமாவின் மனைவியான மிச்செல் ஒபாமா கட்டாயம் போட்டியிட வேண்டும் என்றும் அதில் வெற்றி பெற்று அமெரிக்க ஜனாதிபதியாக வேண்டும் என கருத்துக்களை பதிவேற்றம் செய்து வருகின்றனர்.

மேலும் அமெரிக்க சம்பிரதாய முறைப்படி வெள்ளை மாளிகையில் டிரம்பின் மனைவி மெலினியா டிரம்ப்புடன் மிச்சேல் ஒபாமா தேனீர் அருந்தி விடைபெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.