உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவதற்கு ஏற்ப உள்நாட்டு எரிபொருள் விலையை குறைக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
<p>உள்நாட்டு எரிபொருள் விலையை திறம்பட குறைப்பதற்கு ஐ.தே.கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் அரசாங்கத்திற்கு பல திட்டங்களை முன்வைத்துள்ளார்.
நாட்டில் எரிபொருள் விலை உயர்வு காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். எனவே உடனடி நடவடிக்கைகளை எடுத்து உள்நாட்டு எரிபொருள் விலையை குறைக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

