ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அதன் உயர் மட்ட பிரதிநிதிகளுக்கும் இடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.
எதுல்கோட்டையில் நேற்று திறக்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான கட்சி காரியாலயத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த கலந்துரையாடலின்போது கட்சியின் தற்போதைய நெருக்கடி நிலை, கட்சியின் சின்னம் மற்றும் வேட்புமனு உள்ளிட்ட எதிர்கால நடவடிக்கை தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

