ஹெரோயினுடன் ஒருவர் கைது

236 0
சீதுவ விஜயகுமாரதுங்க வைத்தியசாலைக்கு அருகாமையில் 500 கிராமுக்கும் அதிகமான ஹெரோயின் போதை பொருளை வைத்திருந்த குற்றத்திற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து 501 கிராம் 68 மில்லிகராம் பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

48 வயதான ஜா – எல பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை ரத்மலான ரயில் நிலையத்திற்கு அருகாமையில் 60 கிராம் பெறுமதியான ஹெரோயின் போதை பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன்போது 37 வயதான மொறட்டுவ பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளளார்.