கொலை செய்த பின்னரே சுமனின் சடலத்தை கொண்டு சென்றனர்-சுமன் கொலை சாட்சி வாக்குமூலம்

306 0

kilinochchi-courts-5யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடந்த 2011ம் ஆண்டு சுமன் என்பவரை சித்திரவதை செய்தே கொலை செய்தபின் அவரது சடலத்தை பொலிஸ் வாகனத்தில் கொண்டு சென்றனர் என இக்கொலைச்சம்பவத்தின் முதலாவது சாட்சி தனது வாக்குமூலத்தில் நேற்று கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2011ஆம் ஆண்டு நவம்பர் மாதம் யாழ் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் கொள்ளைச் சம்;பவம் ஒன்றுடன் தொடர்புபட்ட சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரில் சிறிஸ்கந்தராஜா சுமன் உயிரிழந்;தமை தொடர்பான வழக்கு சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக குற்றப்புலனாய்வு பிரிவு பொலிசாரால் யாழ் மேல் நீதிமன்றில் ஒரு பிரிவாகவும், கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் ஒரு பிரிவாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இவ்வழக்கில் சந்தேக நபரான சுமனின் சடலம் கிளிநொச்சி இரணைமடுக்குளத்தினை அண்டிய பகுதியில் மீட்கப்பட்டமை தொடர்பான வழக்கு, நேற்று கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏஆனந்தராஜா முன்னிலையில் சுருக்கமற்ற விளக்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது கொலைச்சம்பவத்துடன் தொடர்புபட்ட முதலாம், இரண்டாம், மூன்றாம், நான்கம், ஐந்தாம் சாட்சிகள் உட்பட ஒன்பது சாட்சிகள் மன்றில் ஆயராகியிருந்ததுடன், குறித்த ஒன்பது சாட்சிகளும் குற்றப்புலனாய்வு பொலிசாருக்கு வழங்கிய வாக்குமூலங்கள் திறந்த மன்றில் வாசித்துக்காட்டப்பட்டு தவறவிடப்பட்ட மேலதிக விபரங்கள் பதிவு செய்யப்பட்டன.

இதேவேளை கடந்த மாதம் 10ம்திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அப்போதைய சுன்னாகம் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி உட்பட 5 பேரும் இதன்போது மன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.
இதில் சாட்சியமளித்த முதலாவது சாட்சியான இராசதுரை சுரேஸ் என்பவர் தனது வாக்குமூலத்தில் தன்னையும் சுமனையும் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் வைத்து கடுமையான சித்திரவதைக்கு உள்ளாக்கினர் என்றும், அதேபோன்று ஏனையவர்களுக்கும் சித்திரவதை செய்தனர் என்றும் ஆணி இறுக்கப்பட்ட பலகையில் நிறுத்தி வைத்;ததுடன் வயர் தடி என்பவற்றாலும் பொலிசார் தாக்கி மின்சாரம் பாய்ச்சினார்கள் என்றும் தெரிவித்தார்.

அத்துடன் சுமனையும், தன்னையும் ஓரே அறையில் தான் வைத்திருந்ததாகவும், தீவிரவாதிகளைப்போன்று கண்மூடித்தனமாக பொலிசார் கடுமையாக சித்திரவதை செய்தனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் சுமன் சுன்னாகம் பொலிஸ் நிலையத்திலேயே உயிரிழந்தார். அவரது சடலத்தை அப்போது சுன்னாம் பொலிஸ் நிலையத்தில் இருந்த புதிய வாகனத்தில் ஏற்றினார்கள். சித்திரவதையின் காரணமாக பாதிக்கப்பட்ட தங்களை பிறிதொரு பொலிஸ் வாகனத்தில் ஏற்றி தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அங்கு தங்களை மரத்திலிருந்து வீழ்ந்து காயமடைந்;ததாகவே சிகிச்சை பெறுமாறு பொலிசார் அச்சுறுத்தினர்.

அத்துடன் சுமன் கொல்லப்பட்டது தொடர்பாக தகவல்கள் வெளியில் தெரிவித்தால் பொய்யானகுற்றச்சாட்டுக்களை சுமத்தி வெளியில் செல்லாதவாறு செய்வதாகவும் தங்களை அச்சுறுத்தியதாகவும் தெரிவித்த முதலாம் சாட்சி, சந்தேக நபர்களான அப்போதைய சுன்னாகம் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி, நான்காவது சந்தேக நபரான மயூரன் மற்றும் ஏனைய சந்தேக நபர்களையும் அடையாளம் காட்டியுள்ளார்.

இதேவேளை அப்போது கைது செய்து தடுத்து வைத்து சித்திரவதை செய்யப்பட்டவர்களில் ஒருவரான மூன்றாவது சாட்சி கடந்த 21-11-2011 அன்று தான் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் வறிய மாணவர்களுக்கு புத்தகப்பைகளை வழங்கிக்கொண்டிருந்த சமயம் அங்கு வந்த புன்னாலைக்கட்டுவன் இராணுவ அதிகாரி மற்றும் புலனாய்வுப்பிரிவினர் சுன்னாகம்பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி ஆகியோர் தன்னை மாவீரர் தினம் கொண்டாடுகிறீர்களா என்று கேள்விகளை கேட்டதாகவும், அப்போதுதான் அந்தநாள் மாவீரர் நாள் என்பதை தான் அறிந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் அன்று இரவு 10.00 மணிக்கு பொலிசார் தன்கைகைது சென்று கடுமையாக தாக்கி சித்திரவதை செய்தனர் என்றும், இதில் சிறிஸ்கந்தராஜா சுமன் என்பவரும் தன்னுடன் இருந்த நிலையில் அவரையும் கடுமையாக தாக்கினார் என்றும், இதில் இருக்கின்ற சந்தேக நபர்களைவிட பிரசாத் என்ற பொலிஸ் உத்தியோகத்தரும் அடங்குவதாகவும் அவர் தற்போது சுதந்திரமாக வெளியில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இதேவேளை அப்போது சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட ஒன்பது பேரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டதுடன், சுருக்கமுறையற்ற விசாரணைகளில் சிறு சாட்சிகள் பதிவுசெய்யப்பட்டதாகவும், ஏனைய மரண விசாரணை அறிக்கை உள்ளிட்ட சாட்சிகளை பதிவு செய்யவுள்தாகவும் வழக்குதொடர்பில் ஆஜரான அரச தரப்பு சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.