எதிர்வரும் சிறுபோகத்துக்கு தேவையான உரத்தை உடனடியாக விவசாயிகளுக்கு விநியோகிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
தாமதமின்றி உரத்தை விநியோகிப்பதற்கு ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு பணிப்புரை வழங்கியுள்ள ஜனாதிபதி, விவசாயிகளை ஒருபோதும் அசௌகரியத்துக்கு உள்ளாக்க வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.
உரத்தினை இறக்குமதி செய்தல், விநியோகித்தல் தொடர்பான தற்போதைய நிலைமை குறித்து ஆராய்வதற்காக நேற்று பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.

