வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக இ. பிரதாபன்!

353 0

வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தின் புதிய பிரதேச செயலாளராக இ. பிரதாபன் நியமிக்கப்பட்டுள்ளதுடன்   புதன்கிழமை பதவியை பொறுப்பேற்கவுள்ளார்.

<p>வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் பழையமாணவரான பிரதாபன் முல்லைத்தீவில் உதவி பிரதேச செயலாளராகவும் புதுக்குடியிருப்பில் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றிய நிலையில் தற்போது வவுனியா வடக்கிற்கு பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக வவுனியா வடக்கு பிரதேச செயலாளராக கடமையாற்றிய க. பரந்தாமன் கடந்த இரு மாதங்களுக்கு முன் கொழும்பிற்கு இடமாற்றப்பட்டதையடுத்து காணப்பட்ட வெற்றியடத்திற்கே இ.பிரதாபன் நியமிக்கப்பட்டுள்ளார்.