ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொள்ளுமாறு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கு அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச அழைப்பு விடுத்துள்ளார்.
நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அதன் கூட்டு கட்சிகளுடனான புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்விலேயே அவர் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
குறித்த நிகழ்வில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இலங்கையில் முதல் முறையாக மக்களாட்சி தற்போது ஆரம்பமாகி உள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி ஊடாக மக்கள் ஆதரவுடன் எதிர்வரும் பொதுத்தேர்தல், மாகாணசபைத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி தேர்தல் ஆகியவற்றை நிச்சயம் வெற்றிகொள்வோம்.
இந்ந நாட்டின் அரசியல் கட்சி ஒருவருக்கோ அல்லது அவர்களுடைய உறவினர்களுக்கோ சொந்தமானது அல்ல. ஐக்கிய மக்கள் சக்தியின் உரிமையாளர் மக்கள் மாத்திரமே ஆகும்.
மேலும் ஐக்கிய தேசியக்கட்சியின் உறுப்பினர்கள் அனைவரையும் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொள்ளுமாறு பகிரங்க அழைப்பு விடுகின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.

