அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன உள்ளிட்ட 24 பேரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 27 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்தல் விடுத்துள்ளது.
இலங்கை வனவிலங்குகள் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு சங்கத்தினால் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையின் போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காட்டு யானைகளின் தாக்குதலிலிருந்து மக்களை பாதுகாக்க சிவில் பாதுகாப்பு பிரிவினருக்கு 2000 கைத்துப்பாக்கிகளை வழங்கியமை அமைச்சரவை தீர்மானத்துக்கு எதிரானதாகும் என குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

