யுத்தக் குற்ற விசாரணைக்கு கலப்பு நீதிமன்றமே தேவை – சர்வதேச மன்னிப்புச் சபை!

304 0

amnesty-intயுத்தக் குற்ற விசாரணையை மேற்கொள்வதற்கு சர்வதேச பொறிமுறையை சிறீலங்கா அரசாங்கம் உருவாக்க வேண்டும் என சர்வதேச மன்னிப்புச் சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

நியாயம், உண்மை, இழப்பீடு மற்றும் கடந்த கால சம்பவங்கள் மீள நிகழாமை என்ற நான்கு விடயங்களையும் நிவர்த்திசெய்யும் வகையில் குறித்த பொறிமுறை அமையவேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறீலங்கா அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை எந்தவித காலதாமதமின்றியும் நிறைவேற்றவேண்டுமெனவும் சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

கலப்பு சர்வதேச நியாயப் பொறிமுறை கட்டாயம் உருவாக்கப்பட வேண்டும் எனவும் அனைத்து தரப்பினராலும் இழைக்கப்பட்ட குற்றங்கள் குறித்து நடவடிக்கை எடுப்பதற்கு அதற்கு தெளிவான அதிகாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய அதிகார வரம்புகளுடன் குறித்த பொறிமுறை உருவாக்கப்படவேண்டுமென வலியுறுத்தியுள்ள சர்வதேச மன்னிப்புச் சபை, சர்வதேச சட்டத்தின்கீழ் அனைத்துக் குற்றங்களுக்குமான தீர்ப்பு வழங்கக்கூடிய அதிகாரத்தைக் கொண்டிருக்கவேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், அனைத்து மட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குத் தொடுப்பதற்கு விசேட சட்டத்தரணிகள் அனுமதிக்கப்படவேண்டும். இந்தப் பொறிமுறைகளுக்கான நீதிபதிகளின் தெரிவு, வெளிப்படையாகவும், சுதந்திரமாகவும், பகிரங்கமாகவும் அமையவேண்டுமென