ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு பங்கேற்கச் சென்றிருந்த அமைச்சர் தினேஷ் குணவர்த்தன உள்ளிட்ட தூதுக்குழுவினர் நாட்டை வந்தடைந்தனர்.
குறித்த தூதுக்குழுவினர் நேற்று (சனிக்கிழமை) மாலை 4.10 அளவில் நாட்டை வந்தடைந்தாக கட்டுநாயக்க விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவில் இருந்து புறப்பட்ட ஈ.கே 654 என்ற விமானத்தினூடாகவே வௌியுறவுத்துறை அமைச்சர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் நாட்டை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த அரசாங்கம் இணை அனுசரணை வழங்கிய 40/1 மற்றும் அதற்கு முந்தைய 30/1, 34/1 ஆகியவற்றிலிருந்து விலகுவதற்கான முடிவினை இலங்கை அரசாங்கம் சார்பாக உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பதற்காக தினேஷ் குணவர்தன ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் பங்கேற்கச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

