ஈரானில் உள்ள இந்திய மீனவர்களை மீட்க விமானம் அனுப்புங்கள்- மத்திய மந்திரிக்கு வைகோ கோரிக்கை

324 0

ஈரானில் உள்ள இந்திய மீனவர்களை மீட்க விமானம் அனுப்புங்கள் என்று மத்திய அரசுக்கு வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.ஈரானில் உள்ள இந்திய மீனவர்களை மீட்க விமானம் அனுப்புங்கள் என்று மத்திய அரசுக்கு வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

900 இந்திய மீனவர்கள் ஈரான் நாட்டில் ஒதுங்கி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அவர்களுள், 700 பேர் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

ஈரான் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு நேரடி விமானங்கள் இல்லை என்பதால், அவர்களை மீட்கும் பணி தாமதம் அடைந்துள்ளது. அவர்களை உடனடியாக மீட்பதற்கு தனி விமானம் அல்லது கப்பல் அனுப்பிட வேண்டும். சீனாவின் வுகான் மாநிலத்தில் சிக்கிய இந்தியர்களை, மிக விரைவாக மீட்டுக் கொண்டு வருவதற்கு, வெளியுறவுத்துறை மேற்கொண்ட முயற்சிகள் பாராட்டுக்கு உரியவை. அதுபோல, ஈரானில் சிக்கி இருக்கின்ற இந்திய மீனவர்களையும் மீட்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.