நாட்டில் புதியதொரு அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்த வேண்டும்- சஜித்

273 0

புதியதொரு அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கிலேயே, பொதுத்தேர்தலுக்கு முகம் கொடுக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

நாட்டில் அடுத்து நடைபெறவுள்ள பொதுத்தேர்தல் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சஜித் பிரேமதாச மேலும் கூறியுள்ளதாவது, “கூட்டணியின் தலைவராக நான், கட்டமைக்கப்பட்ட அரசியல் செயற்பாட்டை மேற்கொள்ள தயாராக இல்லை.

குளிரூட்டப்பட்ட அறையில் இருந்துக் கொண்டு, மக்களின் பிரச்சினைகளை தீர்க்கப் போவதில்லை. இதற்கு நான் தயாரும் இல்லை.

நாம் மேற்கொள்வது அரசியல் பணி அன்றி அரசியல் சேவையாகும். எனினும், துரதிஸ்டவசமாக ஜனாதிபதித் தேர்தலில் எமக்கான ஆணைக் கிடைக்காது போய்விட்டது.

இதற்கு, எமக்கு உரிய நேரமில்லாமமையே காரணமாகும். எமது எதிரணியினருக்கு நிறைய காலம் இருந்தது. ஆனால், பொதுத்தேர்தலில் நாம் புதிய அரசியல் கலாசாரமொன்றை உருவாக்கவே ஒன்றிணைந்துள்ளோம்.

அனைத்து இடங்களிலும் இந்த பயணத்தின் பலன் சென்றடைய வேண்டும். இதற்கான வாய்ப்பு எமக்கு பொதுத்தேர்தலில் கிடைக்கும் என்றே நான் நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.