ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று

295 0
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் இன்று (28) மாலை 3.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் சமகி ஜன பலவேகய அமைப்புடன் இணைந்து போட்டியிடுவதா? என்பது குறித்து இன்றைய கூட்டத்தில் கலந்துரையாடபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் சமகி ஜன பலவேகய அமைப்பின் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பித்து வைக்குமாறு சஜித் பிரேமதாசவினால், ரணில் விக்ரமசிங்கவிற்கு விடுத்துள்ள அழைப்பு தொடர்பிலும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.

சமகி ஜன பலவேகய அமைப்பு எதிர்வரும் மார்ச் இரண்டாம் திகதி தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளது.

எனினும் சமகி ஜன பலவேகய அமைப்பின் சின்னம் குறித்து பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் அறிவிக்கப்படவுள்ளது. எவ்வாறாயினும் சமகி ஜன பலவேகய அமைப்புக்கு நாட்டை ஒன்றிணைத்து செயற்பட முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடதக்கது.