பெரும் பனிப்பொழிவுக்குள்ளும் , கடும் ஏற்றம், மழை என இயற்கையின் சவால்களுக்கு மத்தியிலும் நான்காவது நாள் ஈருருளி பயணம்.

667 0

தமிழினப்படுகொலைக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையினை வலியுறித்தியும் தமிழீழ மக்களுக்கு தமிழீழமே நிரந்தர தீர்வு என்பதுடன் சிங்கள பேரினவாத அரசின் சர்வாதிகார ஆட்சியினையும் தமிழீழ மக்கள் எம் தமிழீழத்தில் சிங்களப்பேரினவாத அரசின் அடக்குமுறைக்குள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருவதினையும் , தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை எடுத்துரைத்தும் நான்காம் நாளாக (27/02/2020) பெரும் பனிப்பொழிவுக்குள்ளும் , கடும் ஏற்றம், மழை என இயற்கையின் சவால்களுக்கு மத்தியிலும் மனிதநேய ஈருருளிப்பயணம் ஐ.நா நோக்கி மாவீரர் துணையுடன் பயணித்துக்கொண்டு இருக்கின்றது.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”