டொனால்ட் ட்ரம்ப்பால் இலங்கைக்கு சாதகம் – இந்திய ஊடகம்

270 0

trumpஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளமையானது, போர்க்குற்ற விசாரணை விடயத்தில் இலங்கைக்கு வாய்ப்பாக அமையும் என்று கருதப்படுகிறது.

இந்திய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.

ஒபாமா நிர்வாகத்தின் கீழ், ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதுவர் சமந்தா பவர், இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்ட பிரேரணையில் முக்கிய பங்காற்றி இருந்தார்.

எனினும் புதிய ஜனாதிபதி ட்ரம்ப் உள்நாட்டு விவகாரங்களிலேயே அதிக அவதானம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் இலங்கை உள்ளிட்ட சர்வதேச நாடுகள் மீதான அமெரிக்கத் தலையீடு குறையும் என்ற கருத்து நிலவுகிறது.

எனவே இது இலங்கைக்கு வாய்ப்பாக அமையும் என்று கூறப்பட்டுள்ளது.