நாளை வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரிக்கை

283 0

நாட்டின் சில பிரதேசங்களில் நாளை வெப்பநிலை அதிகரித்துக் காணப்படுமென, வானிலை மத்திய நிலையம் ​தெரிவித்துள்ளது.

விசேடமாக மேல், வடமேல் மாகாணங்களிலும் மன்னார், காலி, மாத்தளை மாவட்டங்களின் சில இடங்களில் வெப்பநிலை அதிகரித்துக் காணப்படுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே மேலே குறிப்பிடப்பட்டுள்ள பிரதேச மக்கள் வெப்ப நிலை அதிகரித்துக் காணப்படும் சந்தர்ப்பங்களில் போதுமானளவு நீரை அருந்துமாறும் இள நிற ஆடைகளை அணிந்து வெளியே செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் நிழலான இடங்களில் ஓய்வெடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

குறிப்பாக குறித்த காலப்பகுதியில் சிறுவர்களை வாகனங்களுக்குள் வைத்திருப்பதைத் தவிர்க்குமாறும் வானிலை மத்திய நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.