தேசிய லொத்தர் சபை அதிஸ்ட இலாப விற்பனையில் புதிய புரட்சி!

287 0

தேசிய லொத்தர் சபை அதிஸ்ட இலாப சீட்டில் புதிய புரட்சி ஒன்றை ஏற்படுத்தியுள்ளது. வைபர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதிஸ்ட இலாப சீட்டு விற்பனையை ஆரம்பித்துள்ளமையே இந்த புரட்சி ஆகும்.

இதன் மூலம் புதிய சந்தை வாய்ப்பை கண்டறிவதே நோக்கமாகும். வைபர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி அதிஸ்ட இலாப சீட்டு விற்பனை செய்வதன் மூலம் அதிஸ்ட இலாப சீட்டு கருமபீடத்துக்கு சென்று அதனைக் கொள்வனவு செய்வதற்கு முடியாத உயர் தர தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் பல்வேறு பிரிவினருக்கும் எந்தவித சிரமமும் இன்றி அதிஸ்ட இலாப சீட்டை கொள்வனவு செய்ய முடியும்.

வைபர் ஊடாக சீட்டிளுப்பு காணொளி மூலம் காட்சிப் படுத்தப்படவுள்ளது. இதேபோன்று உத்தியோகபூர்வ பெறுபேறு புதிதாக அறிமுகப்படுத்தப்படும் பிரச்சார வேலைத்திட்டம் தொடர்பாகவும் தெளிவுபடுத்தப்படும். தேசிய லொத்தர் சபையின் வருடாந்த வருமானம் 20 பில்லியன் ரூபாவாகும்.