எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான “சமஹி ஜன பலவேகய” கூட்டணியுடன் முன்னாள் அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி இன்று (26) உத்தியோகபூர்வமாக இணைந்துகொண்டது.
நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே குறித்த கூட்டணி அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் தனக்கு ஆதரவளிக்க உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அறிவித்தார்.
தோட்ட தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் முற்போக்கு கூட்டணி தனக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதை வரவேற்ற அவர், தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது தொடர்பாக விஷேட அவதானம் செலுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

