பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான ஆயிரம் ரூபாய் நாளாந்த சம்பள உயர்வு தொடர்பாக மார்ச் மாத முதல் வாரத்தில் தீர்மானமிக்க கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.
இந்த சம்பள உயர்வு தொடர்பாக இதுவரை இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவில்லை என பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிர்வரும் மார்ச் முதலாம் திகதியிலிருந்து ஆயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்படும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்ததுடன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் இந்த விடயத்தை நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்தினார்.
எனினும் ஆயிரம் ரூபாய் நாளாந்த சம்பள உயர்வை வழங்குவதற்கான பொறிமுறை தொடர்பாக அரசாங்கம் இதுவரை தெளிவுபடுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

