முதற்தர அரசியல் கலாசாரமொன்றை உருவாக்குவதே எமது நோக்கம்- சம்பிக்க

264 0

எதிர்காலத்தில் முதற்தர அரசியல் கலாசாரமொன்றை உருவாக்குவதே எமது நோக்கமென நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நாம் அரசியல் தீர்மானமொன்றை எடுத்துள்ளோம்.

அந்தவகையில், ஐக்கிய மக்கள் சக்தியில் ஜாதிக ஹெல உறுமய மற்றும் எமது கட்சியுடன் இணைந்துள்ள சிவில் சமூக அமைப்புக்களையும் இன்று இணைத்துள்ளோம்.

இதன் ஊடாக முதற்தர அரசியல் கலாசாரமொன்றை எதிர்க்காலத்தில் நிலைநாட்டுவதே எமது நோக்கமாகும்.

நாம் கடந்த காலங்களில் பல்வேறு கூட்டணிகளில் இடம்பிடித்துள்ளோம். எனினும், கட்சியாக உருவெடுத்துள்ள இந்த பாரியக் கூட்டணியொன்றில் இணைவது இதுதான் முதன் முறையாகும்.

நவீனத்துவம் மிக்க தேசியவாதமொன்று இதன் ஊடாக உருவாக்கப்படும் என்று நாம் உறுதியாக நம்புகிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.